tamilnadu epaper

காதல்

காதல்

காட்டிக்  கொடுத்துவிடும்  கண்கள் வழியே ...
தினமும்  பேசிக்கொள்ள வருவது காதல் ...

காதல்  ஜோடிகள் சந்தித்துப்  பேசும் வேளையில்....
காலமும் நேரமும் காணாது ....

காணாது கண்டுவிட்ட மகிழ்ச்சி பொங்க...
காதலிய  சந்திக்கும் அற்புதக் காட்சி...

காட்சி விரிகையில் கனவினில் காதலன் ...
டூயட் பாடிட கதாநாயகி காதலியே...

 காதலியே என்னை காதலி என்று...
 கவிதை கிறுக்கிட அவளே காவியம்...

 காவியம் படைத்திட காதலிய  நினைத்து....
 எழுத்தோவியம்  தீட்டி  பத்திரமாக காப்பான்...

 காப்பான் காதலிய ... கனவிலும் பிரியாது...
 என்றெண்ணி விழிப்பான் விடிகின்ற காலையில்....

 காலையில் எழுந்ததும்  பார்ப்பான் காதலியின் ...
புகைப்படத்தை... பின்னர்   குடிப்பான் காப்பி...

காப்பியில் மிதப்பாள் காதலி... 
இவனோ புதிய கனவில் புகுந்து காண்பான் ...


காணுகின்ற வேளையில் காத்திருந்த நேரம்...
கடந்ததை  நினைத்து கண்டும் காணாமல்...


கவிஞர்:
ரெட்டியபட்டி எஸ் மணிவண்ணன்.