காலத்திற்கு ஏற்ற மாதிரி மாறு" என்பது நமக்கு காலம் காலமாய் கொடுக்கப்படும் மாறாத ஒரு அட்வைஸ்.
ஆனால் வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் மாறியே ஆக வேண்டும் என்ற கட்டாயம்" />
"காலத்திற்கு ஏற்ற மாதிரி மாறு" என்பது நமக்கு காலம் காலமாய் கொடுக்கப்படும் மாறாத ஒரு அட்வைஸ். ஆனால் வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் மாறியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்த "சேஃப்டி பின்". வால்டர் ஹண்ட் என்ற அமெரிக்க அன்பரால் 1849 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட.... பார்வையில் சாதாரணமாக இருக்கக்கூடிய.... ஆனால் உலகம் முழுக்க ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய ஐட்டம் இந்த சேஃப்டி பின். பார்ப்பதற்கு மிக சாதாரண வேலைப்பாடு தான். ஒரு சாதாரண கம்பியை எடுத்து சரியான வகையில் வளைத்து, நெளித்து அதற்கு ஒரு மண்டையை கொடுத்து உருவாக்கப்பட்டது தான் இந்தப் பின். கிட்டத்தட்ட 175 ஆண்டுகளாய் உருவம் மாறாமல், மாற்றம் தேவைப்படாமல் 90% அதே உருவத்துடன் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறது இந்த சேஃப்டி பின். மக்களுக்கு சேவை செய்யவோ, மகிழ்விக்கவோ, சம்பாதிக்கவோ, பிசினஸ் செய்யவோ சும்மா சும்மா மாற வேண்டும் என்பதில்லை. வெறும் இட்டிலியை வைத்தே கோடிகள் கட்டிய ஓட்டல் காரர்கள் இன்னும் உண்டு. அப்படி.... உங்க அம்மா பல்சு, உங்க அப்பா பல்சு, உங்க தாத்தா பல்சு என்பது போல இந்த சேஃப்டி பின்னும் ரொம்ப ரொம்ப பல்சு. சிம்பிளாக இருக்கிறோமா சிக்கலாக இருக்கிறோமா என்பது முக்கியமே இல்லை. மாற்றம் தேவையா, தேவையில்லையா என்பது முக்கியமில்லை உபயோகமாக இருக்கிறோமா என்பதே முக்கியம்.. -வெ.நாராயணன், லால்குடி Breaking News:
காலத்திற்கு ஏற்ற மாதிரி மாறு