tamilnadu epaper

கீரை வாங்கி வந்தேன்

கீரை வாங்கி வந்தேன்


கீரனூரு சந்தைக்கு 

கீரை வாங்கப் போனேன்!

கீரைகளின் வகையறிந்து

 பார்த்து வாங்கி வந்தேன்!


பாரில் விளையும் கீரைகளின்..

பலனும் சுவையும் கண்டேன்..

பாயசம் போல் கீரை கூட்டை பந்தியிலே உண்டேன்.!


ஏறிவரும் விலைவாசி

கீரைக்கது இல்லை !

கீரை விளையும் கொல்லையிலே

நோய்நொடிகள் இல்லை.!


ஆத்தா வச்ச அகத்திக்கீரை ஆயுலையும் கூட்டுமே!

பாத்து வைத்த அரக்கீரை.. 

பந்தியில் சுவை கூட்டுமே!


தொட்டில் ஆட வேண்டுமென்றால் முருங்கைக் கீரை சாப்பிடு! சமையல் கட்டில் கீரைகளை அடுக்கி வச்சு சமைத்திடு! 


குப்பை மேனி கீரை சேர்த்து.. தொப்பையினை குறைத்திடு! குப்பைத் தொட்டி அல்ல வயிறு! கீரை உணவை சேர்த்திடு!


கீரைக்குழம்பு சாப்பிடு.. பூச்சியெல்லாம் போயிடும்.. கீரைக்கூட்டு கீரைப் பொறியல் குடலைச் சுத்தம் ஆக்கிடும்!


ஏழை வீட்டில் இனிய உணவு கீரையன்றோ கீரை.! வாழ வைக்கும் மூலிகைதான் கீரையன்றோ கீரை!


 ஊருக்குள்ளே எப்பொழுதும் கிடைக்கும் அந்த கீரை! பாருக்குள்ளே சிறந்து நம்மை வாழ வைக்கும் கீரை!


-வே.கல்யாண்குமார்