tamilnadu epaper

குருவாயூரப்பன் சந்நிதியில்

குருவாயூரப்பன் சந்நிதியில்


எளிமையாகத் திருமணம் நடக்கும் - மனம்

குளிர்ந்திடக் குருவாயூரப்பன் சந்நிதியில் !!


மூலஸ்தான நுழைவாயில் மண்டபத்தில் - நான்கு

மணமேடைகள் திருமணங்கள் நடத்திடவே !!


கோவில் நம்பூத்ரி துளசிமாலைகளைக்

கொடுத்ததும் மணமக்கள் அணிகின்றனர் !!


மணமகன் தங்க மோதிரத்தை

மணமகள் விரலில் போடுகின்றார் !!


மணமகளும் தங்க மோதிரத்தை

மணமகன் விரலில் போடுகின்றார் !!


நம்பூத்ரி மந்திரங்கள் ஓதியதும்

உற்றார் உறவினர் புடைசூழ


செண்டை மேளம் ஒலித்திடவே

சீரோடு மணமகன் தாலிகட்டியதும்


மணமக்கள் மணமேடை விட்டிறங்கி

மணவீட்டார் ஆசிபெற்று ஆலயத்துள்


குருவாயூரப்பன் ஆசிதனைப் பெற்றிடவே

கோவிலுக்குள் தம்பதியாய் செல்கின்றனர் !!


அத்தனை சடங்கும் ஒருமணியில்

அழகாய்த் திருமணம் நிகழ்கிறது !!



-சண்முக சுப்பிரமணியன்

திருநெல்வேலி