tamilnadu epaper

சகியே..

சகியே..

ஒருதுளி
கண்ணீர்
அரும்பி
தழும்பி
இமை
நிறைந்து
விழுந்துவிடுவேன்
என
சொல்லுகிறபோதுதான்
முழுமையாய்
உன்
முகம்
நோக்கினேன்..

மாசுமருவின்றி
குழந்தைபோலும்
அப்பூமுகம்
நெஞ்சை
வதைத்தது..

ஆறுதலுக்காய்
தோள்சேரத்தவிக்கும்
தவிப்பும்..

மழலைபோல்
மடியில்
சாயும்
ஏக்கமும்..

நன்றாய்
தெரிகிறதுன்
விழிகளில்..

மன்னித்துவிடு..

சகியே
இனி
உன்
மனம்
நோகும்
வார்த்தையொன்றை
எப்போதும்
சொல்லமாட்டேன்..

ப்ரிய
மனைவிக்கு..!

ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்