tamilnadu epaper

சந்தனப்பூங்காற்றே!

சந்தனப்பூங்காற்றே!


எந்தன் மேனியைத்

தொட்டுச் 

சென்றதென்னவோ

மெல்லியப்

பூங்காற்றே!


செவியோரம் 

பாடிச்

சென்றதென்னவோ

மந்திர ராகமே!


என் மனதை

இட்டுச் 

சென்றதென்னவோ

இந்திர லோகமே!


கட்டுக்கடங்காமல்

குவிந்ததென்னவோ

காதல் கனவுகளே!


மொட்டாய் 

அவிழ்ந்ததென்னவோ

மோகமலர்ச்

செண்டுகளே!


தட்டுத்

தடுமாறியதென்னவோ 

தாளாத 

வாலிப நெஞ்சமே!


விட்டுப்பிரிந்திடவே

சற்றும்

மனமில்லையே!

தொட்டுத்

தொடர்ந்திடவே


உள்ளமும் 

துடித்திடுதே!


உணர்வில்லாமலே

கால்கள் 

பின்தொடர்ந்திடுதே!


நினைவெல்லாம்

அவள்  நினைவோடு

கலந்திடுதே!


உச்சரிக்கும் சொற்களெல்லாம் 

காதல்

கவிதையானதே!!


அதை ஏந்திசென்றே என்னவளிடம் தந்திடுவாய்

சந்தனப் பூங்காற்றே!


-ரேணுகா சுந்தரம்