tamilnadu epaper

சோகம்

சோகம்

சோகத்தின் மௌனம் என்றென்றும் அழும்,
மறந்தோம் என்று நினைத்தால் மனம் நிம்மதியில் துடிக்கும்
,
மறையாமல் நின்றது கண்ணீரின் ஓசை,
சிரித்த முகத்தில் உள்ளத்தின் கசப்பாய்.

பிரிவு நிழலாக என்னை தொடர்கிறது,
நொடிக்கு நொடி கனவுகள் கரைந்துவிட,
புரியாத வலிகளின் பிணக்காய் நான்,
உள்ளம் உளறுதே இதயத்தை அறியாமல்.

காத்திருந்த பயணங்கள் திரும்பவே இல்லை,
சினம் வைத்த வாதைகள் வெற்றி தராது.

சோகத்தின் சிறுகுரல் நிமிடங்கள் கடக்க,
நெஞ்சம் துடிக்கிறது தாங்க முடியாத சோகத்தில் 

அழுகையில் கூட சிரிக்கத் தவறாதது,
அதுவே சோகத்தின் மிகுந்த தருணம்!

சோகம் அதையும் ஜீரணிப்போம்
பிறகென்ன பழகி
விடும்.

உஷா முத்துராமன்