காணக் கிடைக்காத தங்கம் -நீண்ட
வானத்தில் தேயாத வெண்ணிலா..
மேனகை நிறமே தேனாக -கட்டிய
சேலை கறந்த பாலாக
சாடையில் தெரியுது மானாக -விழிகள்
இரண்டும் இமைக்கும் மீனாக..
தாரகை இரவில் மின்னும் -இவள்
நடந்தால் இரவே ஒளிரும்
கூன்பிறை நெற்றி யவள் -கூடவே
வந்தாள் வாழ்க்கை சுவையாக..
காணக் கிடைக்காத தங்கம் -நீண்ட
வானத்தில் தேயாத வெண்ணிலா..!
- துரை சேகர்
கோவை.