tamilnadu epaper

நல்லூர் பெருமாள் கோவிலில் துலாபாரம் வைபவம்

நல்லூர் பெருமாள் கோவிலில் துலாபாரம் வைபவம்


வந்தவாசி, மே 28:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று மூல மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் துலாபாரம் வைபவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.