tamilnadu epaper

நவம்பர் மாதம் பிறந்தவர்கள்

நவம்பர் மாதம் பிறந்தவர்கள்

2-ஜார்ஜ்பூல் இங்கிலாந்து கணிதவியல் அறிஞர். 

3 அமர்த்தியாசென்- நோபல் பரிசு பெற்றவர். 

4-தியாகி சுப்பிரமணிய சிவா.

4 -ஏ.கே. செட்டியார் -குமரி மலர் ஆசிரியர்-காந்தியடிகள் டாக்குமென்டரி படத்தை தொகுத்தளித்தவர். 

5-தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (சுதந்திர போராட்ட வீரர்) 

7-விபின் சந்திர பால் (சுதந்திரப் போராட்ட வீரர்)

7-  சர்.சி.வி. ராமன்- நோபல் பரிசு இந்திய விஞ்ஞானி. ‌‌

7- மேரி க்யூரி- இரண்டு நோபல் பரிசு பெற்ற போலந்துக்கார்.

7- கமல்ஹாசன்-நடிகர்

8- ஜான் மில்டன்- பாரடைஸ் லாஸ்ட் என்ற காவியத்தை இயற்றிய இங்கிலீஷ்காரர்.

8- ந.பிச்சமூர்த்தி -எழுத்தாளர். 

8- ஹெட்மென்ட் ஹாலி-வானியல் அறிஞர் இங்கிலாந்து.

8- வீரமாமுனிவர்-  தமிழ்நாட்டில் வாழ்ந்த இத்தாலிக்காரர். இயற்பெயர் கான்ஸ்டைன் பெஸ்கி.
தேம்பாவணி இயற்றியவர்.

8- எல்.கே. அத்வானி:-இந்தியாவின் துணைப் பிரதமராக பொறுப்பு வகித்தவர்.

10- மிகையில் கலாஷ்னிக்கோவ் (சோவியத் யூனியன்) (ஏ.கே.47 ரக துப்பாக்கியை உருவாக்கியவர்).

11-அழ. வள்ளியப்பா-குழந்தைகளுக்காக பாடல்களும் கதைகளும் எழுதியவர்.

11-மௌலானா அப்துல் கலாம் ஆசாத் (சுதந்திரப் போராட்ட வீரர்) 

11-பிலோதர் தஸ்தயேவஸ்கி-ருஷ்ய இலக்கிய மேதை 

12- வல்லிக்கண்ணன்- எழுத்தாளர் ‌.

13- சங்கரதாஸ் சுவாமிகள்- நாடகத் தந்தை. 

14- ஜவஹர்லால் நேரு.

16- ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்- சுதந்திர போராட்ட வீரர்.

17- சி. இலக்குவனார்- தமிழறிஞர் ‌

19-இந்திரா காந்தி- இந்தியப் பிரதமர் 

19- மாசேதுங்- நவ சீனாவை நிர்மாணித்தவர். 

19- ஏக்நாத் ராணடே‌ (சுதந்திரப் போராட்ட வீரர் சீர்திருத்தவாதி).

20- திப்பு சுல்தான் ‌.

21. குருநானக் ( சீக்கிய மத நிறுவனர்)

22-அக்பர்-முகலாய சக்கரவர்த்தி. 

22-ஜார்ஜ் எலியட்- விக்டோரியா கால நாவலாசிரியை. அசல் பெயர் மேரி ஈவான்ஸ்.

23- சத்ய சாய்பாபா.

23- கவிஞர் சுரதா. 

27- புரூஸ் லீ -அமெரிக்க நடிகர். தற்காப்பு கலை நிபுணர். 

29- என்.எஸ். கிருஷ்ணன்- நகைச்சுவை நடிகர். 

30- வின்ஸ்டன் சர்ச்சில்- பிரிட்டிஷ் மக்கள் சிங்கம். நான் அவர்களின் கர்ஜனை என்றவர்‌‌.

30- ஜகதீச சந்திரபோஸ்- வங்கத்தில் பிறந்த சர் பட்டம் பெற்ற விஞ்ஞானி ‌

30- மார்க் ட்வெய்ன்-அமெரிக்க எழுத்தாளர்.


 ‌க.ரவீந்திரன்,
22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,
ஈரோடு - 638002.