tamilnadu epaper

நாள் பிறக்கிறது நான் பிறக்க

நாள் பிறக்கிறது நான் பிறக்க

அந்த நாளின்
இந்த நொடிவரை 
அறியாதிருந்தேன்….

இந்த உலகில்
இந்த நாளில் பிறக்கப் போகிறேன் என்று 

கண்ணாமூச்சி விளையாட்டாய்
காட்சியளிக்கும் வாழ்வின் பக்கங்களில்
ஒரு கவிதையாகவோ
கதையாகவோ, நாவலாகவோ
பிரசுரிக்கப் போகிறது காலம் என்னை

நானோ… 
என்னை ….எனது உண்மையைக் கண்டுபிடிக்கும் பொருட்டு 
கண்ணைக்கட்டி காட்டுக்குள் விடப்பட்டவனாய்
நடந்துகொண்டிருக்கிறேன் ….

இன்றேனும்
யாரிடமாவது அகப்பட்டுவிட வேண்டும் நான்…
அப்படியில்லையெனில்
எனக்காவது வசப்பட்டுவிட வேண்டும் எனது 
சுயம் 

ஆமாம்..கொஞ்சம் காத்திருங்கள்
அம்மா சொன்னபடி…
இன்னும் சிறிது நேரத்தில்
பிறக்கப் போகிறேன்…

பிறந்ததும்
உங்களுக்கெல்லாம்
இனிப்பு வழங்கப் போகிறது எனது நான்…
எனது நாளும் தான்?

இனிய நாளுக்குப் 
பிறந்த நாள் வாழ்த்துகள்
இப்படிக்கு அன்புடன் உங்கள் நான்…ம.திருவள்ளுவர்?
??????????