பரம
மண்டலத்தில்
இருக்கும்
பிதாவே
இவர்களை
தண்டியும்..
தாம்
செய்யும்
பாவம்
இன்னதென்று
இவர்கள்
அறிந்தே
செய்கிறார்கள்..
அல்லா
அல்லா
நீ
இல்லாத
இடமேயில்லை
என்று
சொன்னவர்கூற்று
உண்மையானால்
இந்தக்கொடியவர்களை
கொல்லும்
கொலைவாளாவீர்..
அதர்மம்
தோன்றுகிறபோதெல்லாம்
அவதரிப்பதாய்
சொன்ன
கண்ணனுக்கு
மனமிருந்தால்
இந்த
மிருகங்களை
வேட்டையாடட்டும்..
மனிதனை
மனிதன்
கொல்லும்
மகாபாவத்தை
செய்பவன்
எவனோ
அவன்
சிரச்சேதமாகட்டும்..
நீ
இத்தனையையும்
இன்னமும்
பார்த்துக்கொண்டுதானிருக்கிறாயா...
மனித
மரண
ஓலங்களை
கேட்டுச்சுவைக்கும்
நீ
என்ன
கடவுள்..
எல்லோர்க்கும்
மேலொரு
சக்தி
இருக்குமென்றால்
இல்லாது
செய்யட்டும்
இந்தக்கொடுமை..!
ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்