பருவ காதல்களை தூண்டிவிடும் திரைப்படங்களால்...
இன்று சிக்கி திணறுகிறது இளம் தலைமுறை... !
பிஞ்சு நெஞ்சங்களில் காதலையும், காமத்தையும் தூண்டிவிடும் பான் இந்தியா சினிமா ஹீரோக்களுக்கு வருமானமே முக்கியம் பிறர் மானம் முக்கியமல்ல... !
புத்தகத்தை தூக்கும் வயதில் கைபேசியை தூக்கி நடக்கும் இளம் தலைமுறையே...
உன்னைப் பற்றிய ஏக கனவுகளுடன் வாழும் உன் பெற்றோர்களை நினைத்துப்பார்....
திரைப்படங்களில் மதுவோடும், மாதுவோடும்... கோலோச்சும் ஹீரோக்களை விசில் அடித்தான் குஞ்சுகளாக ஆர்பரித்து நீ வரவேற்பது அவர்களின் வருமானத்தை பெருக்குவதற்கே அன்றி வேறில்லை !
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக!
நூல்களை கற்று அதன் வழியில் நட..
என்ற வள்ளுவனின் வாக்கை நடைமுறையாக்கு. பெற்றோர் கனவை உறுதியாக்கு. நீ வாழ்வில் வெற்றி பெற்றால் உன் பின்னால் பலர் .... தோல்வியுற்றால்.... !
படிப்பறிவில்லாதவன் பிணத்திற்கு சமம் என்பது போல்..
நீயும் பிணமாகவே
கருதப்படுவாய்.
-எம்.பி.தினேஷ்.
கோவை - 25