tamilnadu epaper

பாகவத கதைகள்

பாகவத கதைகள்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய வளமான தமிழில் எளிதில் புரியும் வகையில் பாகவத புராணத்தில் சொல்லப்பட்ட பல கதைகளின் தொகுப்பாக ஓர் புத்தகம் "பாகவத கதைகள்" படிக்கும் வாய்ப்பு கிட்டியது.


பேக்கி டெர்ம் டேல்ஸ் திருமதி உமா அபர்ணா அவர்களின் வழிகாட்டுதலில் 10 பெண் எழுத்தாளர்கள் எழுதிய "பாகவத கதைகள்" தொகுப்பை பற்றி பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


சலவைத் தொழிலாளி கொல்லப்பட்டதன் சாராம்சத்தை விளக்கமாக உரைத்த எழுத்தாளர் அலமேலு அவர்கள்


நாராயண நாமத்தின் மகிமையும், சரணாகதியையும் திறம்பட விவரித்த எழுத்தாளர் 

உஷா சங்கரநாராயணன் அவர்கள்


ஏகாதசியின் விரதம் சிறப்பை உலகறிய செய்த அம்பரீஷ சரிதத்தை உரைத்த எழுத்தாளர் கமலி கமலா கோவிந்தன் அவர்கள்


பாகவத சப்தாகம சிறப்பை துந்துளி, துந்துகாரி, கோகர்ணன் மூலம் உரைத்த 

எழுத்தாளர் இந்துமதி அவர்கள்


பரம்பொருள் குழந்தையாக மண்ணை , வெண்ணை உண்டது, அரக்கர்களை அழித்தது என திருமாலின் பெருமையை உரைத்த எழுத்தாளர் சீதா நாராயணன் அவர்கள்


 பகவானுக்கு அன்போடு கர்வமின்றி சமர்ப்பிக்கும் அனைத்தையும் ஏற்பார் என துலாபாரம் தொடங்கியதை எழுதிய எழுத்தாளர் சாந்தி ஸ்ரீனிவாஸ் அவர்கள்


கண்ணனை யார் யார் எப்படி எப்படி அன்போடு நினைக்கிறோமோ அவரவர் மனதில் அப்படியே நிலைப்பான் என்று உரைத்த பானுமதி என்கிற நாச்சியார் அவர்கள்


கண்ணன், அண்ணன் பலராமனோடு புரிந்த லீலைகளை விவரித்த எழுத்தாளர் கமலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்


கலி புருஷனுக்கும் , பரிஷித் மஹாராஜாவுக்கும் நடந்த உரையாடல், சாபம் என எழுதிய எழுத்தாளர் ஹேமமாலினி அவர்கள்


பூரி ஜகன்நாதர் தரிசனத்திற்கு முன் சாட்சி கோபாலனை தரிசக்க வேண்டியது ஏன் என உரைத்த எழுத்தாளர் வனஜா நாகராஜன் அவர்கள்


இவ்வாறு பத்து எழுத்தாளர்கள் விவரமாக எழுதியவற்றை இரண்டு வரிகளில் கூறுவது இயலாத செயல். ஆகவே 

இந்நூலை உடனே வாங்கிப் படிக்க..........


தொடர்புக்கு : பேக்கி டேம் டேல்ஸ் மற்றும் புத்தகாலயா 


யான் பெற்ற இன்பம் அனைவரும் பெறுகவே


ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா


-நா பத்மாவதி, கொரட்டூர்,

சென்னை 80