'ரகசியம்'என்ற ஒரு புத்தகத்தை படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த ரகசியம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்.
குழந்தைகளின் உளவியலை சார்ந்து எழுதப் பட்ட கதைகள்.
பல குழந்தைகளின் உள்ளத்தில் உள்ள பல ரகசியங்களை ஆசிரியர் வெளிக் கொணர்ந்து உள்ளார்.
அதன் முக்கிய காரணம் விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி.
குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு உள்ளது என்பதையோ, 'ஆட்டிசம்' பாதிப்பு உள்ளது என்பதையோ உணராதவர்கள் பலர் உள்ளனர். இதில் உள்ள கதைகள் அனைத்தும் உளவியல் சார்ந்தவை.
என் மனம் கவர்ந்த சில கதைகளைப் பார்ப்போம்.
'வடிகால் வழியே கரைந்த நட்சத்திரம் '
என்ற கதை தலைப்புக்கு ஏற்றதாக உள்ளது. கதையின் நாயகன் சித்தார்த் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியாத வயது. பெற்றோர்கள் ஏன் ஏற்க மறுக்கின்றனர் என்று குழந்தை யோசனை செய்கிறான். நம்மையும் சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர்.
குழந்தைகள் மனதில் எத்தனை கேள்விகள்.
சமூகத்திற்கு பயப் படும் குழந்தையின் மனநிலை.
'எந்த அம்மா?' கதையும் இன்றைய நிலைப்பாட்டை சிந்திக்க வைக்கிறது.
'ஹெட்போன்' என்றொரு கதை. அதில் ஆரா என்ற பெண்ணின் எண்ண ஓட்டங்கள். அவள் இறுதியில் 'அவன் என் தம்பி ' என்று கூறும் போது நம்மை அறியாமல் அப் பெண்ணின் மனநிலையை நம்மால் உணர முடிகிறது. அவன் 'ஆட்டிசமோ' , ' மன நலம் குன்றிய பையனோ தெரியுது. ஆனால் தன் தம்பி என்று ஒத்துக் கொள்கிறாள்.
எவை எல்லாம் குடும்பத்தினரால் ரகசியமாக வைக்கப் பட்டதோ அது ரகசியம் இல்லை அனைவருக்கும் தெரிய வேண்டியது என்பதை நம்மால் உணர முடிகிறது.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் லட்சுமி பிரியா. அனைவரும் படிக்க வேண்டிய நூல். ஆசிரியை இன்னும் பல் வேறு நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
புஸ்தகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அவர் பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்.
புஸ்தகம் வேண்டுவோர் அழைக்கப்படுகிறது வேண்டிய அலைபேசி எண் +919790349390
-ருக்மணி வெங்கட்ராமன்