[20:01, 10/22/2024] Tamilnadu Epaper: புன்னகை தவழும்
மலர் முகமே.//
முகமே மனதின்
நினைவுகள் அறிவேன்.//
அறிவேன் காதலைக்
கண்கள் வழியே.//
வழியேப் பார்த்த
நொடி முதல்//
முதல் இதயம்
துள்ளி ஆடுதே//
ஆடுதே எண்ணத்தில்
எழில் ஓவியமாய்//
ஓவியமாய் நிலைத்தாய்
வானத்து நிலவாய்.//
நிலவாய் குளிர்ந்து
நாணம் மறைத்தாய்//
மறைத்தாய் உறவில்
கலந்த உணர்வை//
உணர்வை உரைத்தாய்
இதழின் புன்னகையில்.//
-
தாரா மதன்