சிட்டுக் குருவியும் ராபின் பறவையும்
செல் கதிரால் அழிந்தன!
சிற்றுயிர் இனங்களும் அரிமாவும் வேழமும்
தேசத்தைக் காக்கும் நண்பன்!
முட்டாள் மனிதனோ இயற்கையைப் பேணாமல்
முழுவதும் அழித்துப் போட்டான்!
மூளைக்குள் தோன்றிய விஞ்ஞானம் இயற்கைக்கு
முரணான செயல்பா டாகும்!
பட்ட மரங்களை துளிர்த்திடச் செய்வது
பயனற்ற வேலையாம்!எம்
பாரிய யுத்தமும் இயற்கையோ டென்பதால்
பாதிப்பும் எமக்குத் தானே!.
எட்டுத் திசைகளும் இயற்கையை கெடுத்து நாம்
எங்ஙனம் உயிர் வாழ்வதாம்!
இயற்கையை அழிக்காத அறிவியல் ஒன்றுதான்
இதற்கெல்லாம் தீர்வு காணும் !!
-குடந்தை பரிபூரணன்