சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்பு..
மே.07
புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் பட்டமராத்தான் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.பட்டமரத்தான் கோயில்
65 -ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குதிரை, சிலம்பம், தாரை தப்பட்டை, நடனத்துடன் மேளதாளம் முழங்க பூத்தட்டு,பால்குடம் எடுத்து முக்கிய சாலை வீதி வழியாக சென்று பட்டமராத்தன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி, நகரச்செயலாளர் அழகப்பன்,ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேசன்,
பாலசுப்ரமணியன்,முன்னாள் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தங்கராஜ்,முன்னாள்
ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகப்பணியாளர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.