கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடந்தது. அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், பூ கரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களும் தீபாரதனைகளும் நடந்தது. 11 கிராம மக்கள் ஒன்று திரண்டு தேர் இழுத்தனர். பக்தர்கள் தேர் மீது வாழை பழத்தை வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு நீர்மோர். அன்னதானம் வழங்கப்பட்டது.