நாகர்கோவில், மே 7-
போதை இல்லாத தலைமுறையை உருவாக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது , போதை இல்லா ஆரோக்கியமான வாழ்வை வலியுறுத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தி பெடரல் இணையதளம் மற்றும் பெதஸ்தா மருத்துவமனை இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாரத்தான் ஓட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியை தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்.
10 கிலோமீட்டர் ஆண்கள் மற்றும் 5 கிலோ மீட்டர் பெண்கள் என இரு பிரிவுகளில் நடந்த இந்த மாரத்தான் போட்டியில் 1300 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர் , அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டி வேப்பமூடு சந்திப்பு , டதி பள்ளி , ஆட்சியர் அலுவலகம், கோட்டார் வழியாக வந்து மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பெதஸ்தா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் லெவின்ஸ் டேனி கோல்டு மன்னவா மில்க் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் ரஸ்கின் , முன்னாள் மாநில உடற்கல்வி ஆய்வாளர் விஜயகுமாரி , ரோஜாவனம் பள்ளி தாளாளர் அருள் கண்ணன் மற்றும்ரெப்கோ வங்கி மண்டல மேலாளர் முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏராளமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.