மே 7-
உலக இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் கடந்த மாதம் 90 கிலோ முதல் 140 கிலோ எடையுள்ள 11 இளவட்ட கற்களை அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து தூக்கி உலக சாதனை படைத்துள்ளார்.அவரை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் சந்தித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்திற்கும் குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். கலெக்டர் அழகு மீனா உடன் இருந்தார்.