வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் சித்திரை மாதம் செடில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த ஏப்ரல் 20- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி கடந்த ஏப்ரல் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை அம்மன் அன்ன பட்சி வாகனத்தில் வீதியுலா காட்சியும், அதனைத் தொடர்ந்து வானவேடிக்கையுடன் செடில் சுற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த மே 4- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி விழாவும், இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வானவேடிக்கை , பிரபல நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியுடன் வீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை சந்திரசேகரபுரம் D. ஸ்ரீராம் அய்யர் மற்றும் சந்திரசேகரபுரம் கிராமவாசிகள், உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.