" சரவணன் கமலா கணவன் மனைவி ஒரே பெண் அகிலா .சின்னக் குடும்பம்.
ஊரங்கு காரணமாக வேலை இழந்த சரவணன் தம்பி ரவி தன் குடும்பத்தோடு அண்ணன் வீட்டில் வந்து தஞ்சம் புகுந்தான் .
கமலாவிற்கு இது பிடிக்கவில்லை நேரடியாகவே ரவி குடும்பத்தை கரித்து கொட்டினால் பலமுறை .
நிலைமையை உணர்ந்த ரவி அமைதியாக இருந்து வந்தார் தன் தலைவிதியை நொந்தபடியே .
இதற்கிடையில் வேலை இழந்த கமலாவின் தம்பி ராஜா தன் குடும்பத்தோடு வந்து நின்றான் .
தன் தம்பி குடும்பத்தை மட்டும் வளமான கவனித்தால் . ரவி குடும்பத்தை ஏளனம் செய்தால் கமலா .
இருந்தாலும் நிலை குலைந்த கமலா செய்வது தெரியாமல் தவித்தால் இரு குடும்ப தஞ்சத்தால்.
வீட்டு மளிகைப் பொருட்களை வாங்கி கொண்டு வீடு நோக்கி நடந்தால் கமலா .
வீட்டுக் கவலை தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது அவளுக்கு .நிம்மதி இழந்தவளாய் காட்சி தந்தால் கமலா .
வீதியில் வரும் போது தாயை இழந்த கன்றுக் குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தது ஒரு பெரிய ஆடு .
இதை கண் இமைக்காமல் பார்த்து வந்த கமலாவிற்கு மனதில் ஏதோ தோன்றியது போல இருந்தது .
ஆமாம் , மனிதநேயம் தான் மாமருந்து குடும்ப நிம்மதிக்கும் அது தான் மூல விதை என்பதை அந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுவது போல் இருந்தது கமலாவிற்கு .
எல்லாம் புரிந்து கொண்டவளாக தஞ்சம் புகுந்த இரண்டு குடும்பத்துக்கும் பேதம் இல்லாமல் அன்பாக , இதமாக , பதமாக நடந்து கொண்டால் அவர்கள் வீடு திரும்பும் வரை கமலா ...."
அன்பு மட்டுமே மூலதனம் என்பதை உணர்ந்தவளாய் இப்போது கமலா ...."
- சீர்காழி .ஆர். சீதாராமன் .