tamilnadu epaper

மின்னல்

மின்னல்


மேகத்திடம் கோபித்துக் கொண்டு மின்னல் ஏனோ என்னிடம் வந்தது.


வாதாடி மின்னலை மீட்டுச் செல்ல வானம், காற்றை அழைத்து வந்தது.


பூக்களை அழைத்து வண்டுகள் தன் புலம்பலை சொல்லியது.


சந்திரனும் சூரியனும் ஒரு சேர மின்னலின் சங்கதி என்ன கேட்க வந்தது.


மாலைப்பொழுதும் மழைத்துளியும் மௌனம் கலைத்து உரையாடல்கள் உச்சத்தில் இருந்தன.


இயற்கையில் இத்தனை மாற்றம் இயற்கை தாயும் குழப்பத்தில் நின்றாள்.


நொடியில் என்னை தீண்ட மடியில் வந்து சேர்ந்த மின்னலே கவிதையானாய்.


வெள்ளை தாளில் கவிதை ஆனாய் உள்ளத்தால் வணங்குகிறேன்.


மானுடனைத் தேடி வந்த மின்னலே கவிதைக்கு வார்த்தை ஒளி கொடுத்தாய்.


போதும்,மேகத்திடம் ஊடல் கொள்ளாமல் வானத்திடம் வந்து சேரும்.


இயற்கை தாயின் பரிசுத்த அன்பை ஏற்று மின்னல் மீண்டும் வானத்திலும் சேர்ந்தது...