அன்று அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது நேரம் 7.30pm. கை பேசி ஒலித்தது . எடுத்து காதில் வைத்ததும் " என்னமா கிளம்பிட்டியா ? " என்று அம்மாவின் குரல் ..
"இதோ கிளம்பிட்டேன்மா " என்று சொல்லி கை பேசியை பையில் வைத்து கிளம்பினேன் .
மழை சின்னதாய் தூறல் போட ஆரம்பித்தது . மழை நன்றாக வருவதற்குள் வீடு போய் சேரவேண்டும் என்று நினைத்து கொண்டே ஸ்கூட்டி யில் கிளம்பினேன் .
மழை இன்னும் தூறல் போட்டுக்கொண்டு தான் இருக்கிறது . ஓர் இரு துளிகள் கண்ணில் அப்பப்போ வீழுகின்றன . துடைத்து கொண்டு வண்டியை சற்று விரைவு படுத்தி ஒட்டி கொண்டிருந்தேன் .
ரெங்கா ஹோட்டல் முன்னாடி வளைவு வந்ததும் வண்டி நின்று விட்டது ..
"பெட்ரோல் காலியா ? வேறு வழியே இல்ல பெட்ரோல் பங்க் வரைக்கும் தள்ளிகிட்டே தான் செல்லனும் ." என்று நினைத்து கொண்டே நடந்து கொண்டிருந்தேன் .
கொஞ்சம் தூரம் சென்றதும் ஒரு பாக் ரோடு ஓரத்தில் கிடப்பதை பார்த்தேன் . அதை எடுப்போமா? வேண்டாமா ? என்ற சந்தேக போராட்டம் மனதில் நடந்து முடிந்தது .
கடைசியாய் எடுத்து அதில் ஏதாச்சும் முகவரி இருந்தால் அந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன் ..
அது ஒரு பெண்களுக்கான பேக். விலைமதிப்புடையதுனு பார்த்தாலே தெரியும் . உள்ளே பான் கார்டு முதல் கிரெடிட் கார்டு வரை இருந்தன .அழகான ஒரு கை பேசியும் இருந்தது . வீட்டுக்கு போய் மீதியை பார்க்கலாம் என்று நினைத்து கொண்டு பெட்ரோல் பங்கை தேடினேன் .
வீட்டுக்கு சென்று பேகில் இருந்த கை பேசியை சரி செய்ததும் அதில் அழைப்பு வந்தது .
" நான் திவ்யா பேசுறேன் . நீங்க யாருனு சொல்றீங்களா?." என்று ஒலித்தது அழகான பெண் குரல் .
" என் பேரு நீபா இந்த பேக் ரோடு சைடு ல பார்த்தேன் "
" நீபா அது என்னோட பேக் , இன்னைக்கு அங்க வச்சு ஒரு சின்ன ஆக்சிடென்ட் . தலைல அடி பட்டு மயங்கிட்டேன் . அங்கே இருந்தவங்க தான் ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க . முழிச்சு பார்த்த பேக் காணோம் . ரொம்ப நேரமா ட்ரை பண்றேன் மொபைல் சுவிட்ச் ஆப்னு வந்திச்சு ."
" ஓ அப்படியா . இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு ? நீங்க எங்கன்னு சொன்ன நான் எடுத்திட்டு வந்து குடுத்திருறேன் ."
" ரொம்ப தேங்க்ஸ் நீபா . இப்போ பரவாயில்லை . நான் அட்ரஸ் சென்ட் பண்றேன் ."அந்தோ இந்தோ என்று ஒரு வாரம் ஆகிவிட்டது.
நாளை ஞாயிற்றுக்கிழமை . எப்படியும் பேக் இன்னைக்கு கொடுத்திடலாம்னு நினைத்து வீட்டை விட்டு கிளம்பினேன் .
தெருவின் ஓரத்தில் திவ்யா வின் வீடு இருந்தது . அழைப்பு மணி அடித்ததும் ஒரு வயதான அம்மா கதவை திறந்தார் .
" யாரு ? "
"நான் நீபா . இந்த பேக் ரோடுல கிடந்திச்சு அதான் கொடுக்கலாம்னு வந்தேன் ".
" ரொம்ப தேங்க்ஸ்மா . வா வந்து உட்காரு ."
என் கண்கள் திவ்யா வை தேடின .
" ஆண்ட்டி நீங்க திவ்யா க்கு என்ன வேணும் ?"
" திவ்யா என் பொண்ணு " என்று கண்ணில் நீர் நிறைய சொன்னார் .
"ஒரே பொண்ணு! பாவி மக தனியா தவிக்க விட்டு போய்ட்டாள் " என்று அழ ஆரம்பித்தார் .
எனக்கு ஒன்னும் புரியவில்லை , அப்போதான் சுவரில் மாட்டி இருந்த போட்டோ கண்ணில் பட்டது . ஒரு இளவயது பெண்ணின் போட்டோக்கு மாலை போட்டு , வைத்திருந்தார்கள் ..
"அம்மா அது " என்று போட்டோவை கை காண்பித்தேன்
" என் பொண்ணு திவ்யா வ நீ பார்த்தது இல்லைல ?" என்றார் .
நீபா : "????? அம்மா இந்த நம்பர் யாருதுனு தெரியுதா ?"என்று எனக்கு கால் வந்த நம்பரை காட்டினேன் .
" இது திவ்யா நம்பர் , இந்த போனோட நம்பர் இது . "
" நான் வரேன் " என்று சொல்லி கிளம்பியதும் , " தண்ணி கூட குடிக்காம கிளம்பிறியே? " என்றார் .
இன்னொரு நாள் கண்டிப்பா வறேன்மா என்று சொல்லி வேகமாக ஓட்டினேன் .
ஒன்றும் புரியவில்லை எப்படி இது ? எனக்குள் பயமா , வேதனையா என்றும் புரியல . ஆனா கை கால்கள் இன்னும் நடுங்கி கொண்டு தான் இருக்கிறது . இன்னும் குழப்பத்திலேயே இருக்கேன் . பேயா ? ஆத்மாவா ?வேறு எதாவது ??
கவிஞர் பாலசந்தர்
மண்ணச்சநல்லூர்