சுலபமாக ரிப்பன் நாடா செய்திடலாம் வாங்க.
இரண்டு டம்ளர் புழுங்கலரிசி (இட்லி அரிசி அல்லது ரேஷன் புழுங்கலரிசி) எடுத்து நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு டம்ளர் பொட்டுக்கடலை எடுத்து மிக்ஸி ஜாரில் நான்கு மிளகாய் வற்றல், கல் உப்பு, பெருங்காயம் சேர்த்து நைசாக பிடித்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
ஊறவுத்துள்ள அரிசியை நீரை வடிகட்டி ஒரு பிடி கற்வேப்பிலை, புதினா இலைகள், ஒரு துண்டு இஞ்சி, பத்துப்பல் பூண்டு எல்லாம் சேர்த்து கெட்டியாக நைசாக அரைத்து கொள்ளவும்.
பொட்டுக்கடலை மாவு கலவை, அரிசி மாவு கலவை இரண்டையும் சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் இளகிய வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இதனை ரிப்பன் அல்லது முறுக்கு அச்சில் மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்க அருமையோ அருமைதான்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி திண்பதற்கு ஏற்றது. சுத்தமாக வீட்டிலேயே செய்வதால் பணமும் மிச்சம். உடலுக்கும் ஏற்றதாக இருக்கும். நீங்களும் செஞ்சு அசத்துங்க.
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்