tamilnadu epaper

மருதாணியின் மகத்துவம்

மருதாணியின் மகத்துவம்


மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.


சித்தர்கள் இதற்கு அட்டகர்ம மூலிகை என்று சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த மூலிகையை நம் வீட்டில் வைக்கும்போது எந்த விதமான கிருமிகள் மற்றும் பூச்சிகளாக இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்த மருதாணி இலை (Maruthani Leaves) மட்டுமின்றி பூ, காய், வேர், விதை, பட்டை போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது.


மருதாணி வைப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்கள் உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும்தாம். உடலில் இருக்கிற அத்தனை நரம்புகளின் பிரதிபலிப்புப் புள்ளிகளும் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. இங்கே மருதாணி வைப்பதால், உடல் குளிர்ச்சியாகும், ரத்த ஓட்டம் சீராகும், இதயப் படபடப்பு, ரத்த அழுத்தம் இரண்டும் சரியாகும், மன அழுத்தம் குறையும்.


மருதாணி இலைகள் உடலில் ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது. மருதாணி இலைகளை எடுத்து நீரில் கொதிக்க வைக்கவும். அந்த நீரை வடிகட்டி அதில் இரண்டு மடங்கு அளவு நீர் சேர்த்து இரவு உணவுக்கு பிறகு குடிக்க வேண்டும்.


மருதாணி மரப்பூக்களை எடுத்து சுத்தப்படுத்தி வைக்கவும். தினமும் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு மருதாணி பூக்களை அரைத்து சேர்த்து குடித்துவர வேண்டும். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் தூக்கம் நன்றாக வரும்.


நகங்களில் வரக்கூடிய நகச்சுத்தி, நகவிரல் இடுக்கில் புண், விரல்களின் ஓரங்களில் தோல் உரிதல் போன்றவை வருவதற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகளும் கிருமிகளும் தான். நகச்சுத்தி அதிக வலி மிக்கது. உபாதை அதிகம் தரக்கூடியது. இதை போக்க எளிய வைத்தியம் மருதாணியை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து தடவுவதுதான்.


தொடர்ந்து 5 நாட்கள் வரை இதை நகத்தில் தடவி ஒரு மணி நேரம் விட்டு கழுவி வந்தால் நகச்சுத்தி காணாமல் போகும். கூடுதலாக நகத்தில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், பூஞ்சைகள் வெளியேறும். உடலில் கொப்புளங்கள், வேனல் கட்டிகள் வந்தாலும் இதை பயன்படுத்தலாம். கூடுதலாக வேப்பிலையை சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.


மருதாணி இலையை நன்றாக கொழுந்தாக எடுத்து வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு 1 மணி நேரம் கழித்து அந்த நீரை வாயில் ஊற்றி சில விநாடிகள் வைத்திருந்து நன்றாக கொப்புளிக்க வேண்டும். வாய் முழுக்க தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி செய்துவந்தால் வாய்ப்புண் குணமாகும்.


வலி எரிச்சல் உபாதை இருக்காது. தொண்டை வரையும் கொப்புளிக்கலாம். அதனால் சுத்தமான நீரில் சுத்தம் செய்த மருதாணி கொழுந்தை பயன்படுத்த வேண்டும். இதனால் அவை உடலுக்குள் போனாலும் கெடுதல் இருக்காது.


சருமத்தில் வரும் கரும்படை, வண்ணான் படை, கால் இடுக்கிலும், கழுத்து, கை இடுக்கில், தொடையில் வரக்கூடும். மருதாணி இலையை மஞ்சள், வேப்பிலையுடன் அரைத்து அந்த இடத்தில் தடவி குளிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் அளவுக்கு இப்படி செய்துவந்தால் கரும்படை காணாமல் போகும். ஆனால் அதை பயன்படுத்தும் போது அதிக சோப்பு போடக்கூடாது. 


கால் ஆணிக்கு

வசம்பை இடித்து மருதாணியுடன் சேர்த்து அரைத்து அதில் மஞ்சள், கற்பூரம் கலந்து மீண்டும் அரைத்து விழுதாக்கி இரவு படுக்கும் போது உள்ளங்காலில் கால் ஆணி இருக்கும் இடத்தில் அந்த விழுதை வைத்து மெல்லிய துணியில் கட்டினால் கால் ஆணி குணமாகும். 


பாதங்களில் எரிச்சல், சேற்றுப்புண், கால் நகம் சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு மருதாணி இலையை அரைத்து பாதத்தில் தடவி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

மருதாணி இலைகள் (Maruthani Leaves) உறவைக்கப்பட்ட தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு இரத்த அழுத்தம் சமச்சீரான அளவில் இருக்கச் செய்கிறது.

இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த நாளங்களில் இரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதாணி இலைகளுக்கு (Maruthani Leaves) உண்டு.

இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் மருதாணி இலை (Maruthani Leaves) தண்ணீரை அருந்தி வருவது நல்லது.


கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற கொஞ்சம் மருதாணி (Maruthani) இலைகளை, தூய்மையான தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற அனைத்து உறுப்புகளில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறி இவ்வுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.


சுகர் அதிகமாக இருப்பவர்களுக்கு நரம்புகள் சீக்கிரம் பலவீனமாகிவிடும். கால்கள் குடைவதுபோல வலிக்கும், சிலருக்கு பாதம் மரத்துப்போகும், மருதாணி அரைத்து போட சரியாகும்.


மாதவிடாய்க்கு முன்னதாகப் பெண்களிடம் ஒருவித எரிச்சலும் சிடுசிடுப்பும் காணப்படும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி வரும். இவற்றுக்கெல்லாம் காரணம் ஹார்மோன் இம்பேலன்ஸ்தான். இயற்கை வைத்தியம், விரல் முனைகளைத் தலைக்கான பகுதியாகப் பார்க்கிறது. அங்கு மருதாணி வைப்பதால், ஒற்றைத் தலைவலிபோகும். எரிச்சலும் சிடுசிடுப்பும் மட்டுப்படும்.


மருதாணி வாதங்கள் வராமல் இருக்கவும், அதனால் வருகிற வலியை நீக்கவும் இது உதவும்.


மருதாணி விதை எண்ணெய்யை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும்.


மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.



-ஹீலர் அரவிந்தன்

தஞ்சை.