tamilnadu epaper

உடனடி இட்லி பொடி

உடனடி இட்லி பொடி


ஒரு கப் பொட்டுக்கடலையை பொறுக்கும் சூடுவரை வறுத்து ஆறவைத்துக் கொள்ளவும்.


மிக்ஸி ஜாரில் பத்து பல் பூண்டு, எட்டு சாம்பார் வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, புதினா இருந்தால் ஒரு கைப்பிடி, இரண்டு ஸ்பூன் வரமிளகாய்த்தூள், தேவையான கல்உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் இவற்றை பொட்டுக்கடலையுடன் சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.


பதினைந்து நாட்கள் வரை கெடாது. இட்லி, தோசை, அடை, சப்பாத்தி, பொங்கல் எல்லாவற்றிற்கும் சிறந்த சைடு டிஷ் இது.


சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து, அப்பளம் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். நீங்களும் செஞ்சு அசத்துங்க.



வி.பிரபாவதி

மடிப்பாக்கம்