tamilnadu epaper

குளு குளு குல்ஃபி

குளு குளு குல்ஃபி


தேவையான பொருட்கள்


பால் 800 மிலி


மாம்பழ கூழ் (pulp) 500 ml


அரை கப் சர்க்கரை


இரண்டு ப்ரட் துண்டுகள்


மூன்று ஸ்பூன் பால் பவுடர்


இரண்டு ஏலக்காய்


800மில்லி பாலை 400மில்லியாக சுண்ட காயவைத்து ஆறவிடவும்.


மாம்பழ பல்ப்பையும், ஏலக்காய், ஓரம் கட் செய்த ப்ரட் துண்டுகள், பால் பவுடர் எல்லாவற்றையும் முதலில் அரைத்துக் கொள்ளவும். பிறகு காய்ச்சி ஆறவைத்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். சரியாக இருக்கும். பால் அதிமாக தெரிந்தால் நிறுத்திக் கொள்ளவும்.  


கொஞ்சம் கெட்டியாக இருக்கும் இந்த மாம்பழ கலவையை ஐஸ்க்ரீம் மௌல்டில் ஊற்றலாம்.


இல்லையேல் டிசைன் இல்லாத கப்புகள், டம்ளர்களில் நிரப்பி அலுமினியம் பாயில் ஷீட் மூலம் மூடிவிட்டு நடுவில் ஒரு ஐஸ்க்ரீம் குச்சியை சொருகி விடவும்.  


ஃப்ரீசரில் எட்டு மணிநேரம் வைத்துவிட்டு பின் அதனை அடிப்பகுதியில் சிறிது நீரில் நனைத்தால் அழகாக எடுக்க வரும். அவ்வளவுதான் குளு குளு குல்பி ரெடி. நீங்களும் விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.


பிடித்தால் பொடித்த நட்ஸ், வறுத்து ஊறவைத்த சேமியா சேர்க்கலாம். மாம்பழம் வாங்க கிளம்பி விட்டீர்களா?



-வி.பிரபாவதி

மடிப்பாக்கம்