tamilnadu epaper

வரம்

வரம்

 - திருமாமகள்


சாலையில் விபத்து

இளம் பெண் இறப்பு

அதிர்ச்சி மட்டும் இல்லை

அதிசயமும் தான் அங்கே

ஆம் ; வீடியோக்கள் மறுப்பு

காரணம் இருந்தது

அரை நிர்வாணத்தில் அவள்

அருகில் கிடந்த தார்ப்பாய்

கிருஷ்ணர் அனுப்பிய ஆடை

 அவள் உடல் போர்த்த

பரவாயில்லை உலகம்

உயிருடன் இருக்கையில்

உயிரோடு உருக்குலைக்கும்

இறப்பிலாவது அது ஒரு

வரமாய் ஆகட்டும் பெண்களுக்கு