அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல்.
தங்கம் விலை சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்துள்ளது.
என்கவுண்டர் மிரட்டல் புகார் முன்னாள் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க ஹை கோர்ட் தடை.
கள்ளக் காத்தான் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் வாசிப்பு திறன் ஆய்வு.
நாகர்கோயில் தாம்பரம் ரயில் பெட்டிகளின் அமைப்பில் மாற்றம்.
அமேசான் பி சே சேவையில் கோடை காலத்தில் அதிரடி சலுகையில் அறிவிப்பு.
2034 இல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமுல் நிர்மலா சீதாராமன் அமைச்சர் தகவல்.
இளநீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் கட்டுரை அருமை.
அகில இந்திய குதிரை ஏற்ற போட்டியில் வெற்றி பெற்ற சென்னை விரைப்படை காவலர்கள் கமிஷனர் பாராட்டு.
மதுரை மாநகராட்சியில் வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரிக்கு 5 சதவீதம் சிறப்பு சலுகை அறிவிப்பு.
ஹிந்தி சிரிப்பை ஏற்க மாட்டோம் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் செழியன் பேச்சு.
நாகையில் செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா.
மயிலாடுதுறையில் தேர்வாணையத்தால் தேர்வான தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.
போதை மீட்பு மறுவாழ்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் தமிழக அரசின் அரசு அரசிதழ்யில் வெளியீடு.
இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு மோடி துரோகம் வைகோ கண்டனம்.
வலங்கைமான் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா.
மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்களுக்கான சிறப்பு முகாம் உளுந்தூர்பேட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் கவிஞர் பாட்டாளியின் திறக்க களம் நூல் ஆய்வரங்கம்.
தரங்கம்பாடி அருகில் மாரியம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்.
நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா.
நீலகிரியில் 56 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
ஜோக்ஸ் மீம்ஸ் சிறப்பாக உள்ளது.
கவிஞர்களின் புதுக்கவிதைகள் ஒவ்வொன்றும் அருமையாக எழுதப்பட்டுள்ளது அனைவருக்கும் பாராட்டுகள்.
இன்றைய நாளிதழ் அனைத்து பக்கங்களும் செய்திகளும் சிறப்பாக உள்ளது தொகுத்து அச்சிட்டு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
-அபிபுல்லாகான். க
போளூர்