tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-07.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-07.04.25


அன்புடையீர்,


வணக்கம். 7.4. 2025 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் வரலாற்று சிறப்பு பெற்ற பாம்பன் புதிய ரயில் பாலத்தை நம் பிரதமர் மோடிஜி அவர்கள் நம் நாட்டிற்காக அர்ப்பணித்த அந்த நிகழ்ச்சியும் படங்களும் புல்லரிக்க வைத்தது. மிகவும் அற்புதமான செய்தியை ஆவலுடன் படிக்க வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான நாளாக எனக்கு அமைந்தது. திருக்குறள் மிகவும் அருமை படிக்கும் போது அதிலுள்ள பொருளும் புரிவதால் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரிஷிகேஷில் ஸ்ரீ ராம நவமி என்ற செய்தியை படித்து என்னை ரிஷிகேசிக்கு அழைத்துச் சென்ற தமிழ்நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இளநீர் ஒரு அற்புதமான பானம் அதை குடிப்பதால் நமக்கு எவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நலம் தரும் மருத்துவம் பகுதியில் அழகாக தெளிவாக சொன்னது பாராட்டுக்குரியது. 2034 இல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்ற நிர்மலா சீதாராமன் அவர்களின் பேச்சும் படமும் இன்றைய அரசியலை அழகாக படம் பிடித்து காட்டியது. தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பரமசிவசுப்புராயன் அவர்களின் வரலாறு மிகவும் அருமையான தகவல். புதுக்கவிதை பக்கங்களில் வரும் கவிஞர்களின் கவிதைகளைப் படிக்கும் போது ஒவ்வொரு நாளும் புது புது கவிஞர்கள் தோன்றி அழகான வரிகளால் கவிதையை ரசித்து படிக்க கொடுப்பது மிகவும் அருமை. அதை மிக துல்லியமாக அழகாக பிரசூரிக்கும் தமிழ்நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு நாளும் வரும் பல்சுவை களஞ்சியம் பகுதி கலக்கலோ கலக்கல். அதில் வரும் மீம்ஸ் ஒன்று போதும் நாம் நம்மையே மறந்து ரசித்து சிரித்து மகிழலாம். பன்முகம் பகுதி மிகவும் அருமை. அதில் வரும் தகவல்கள் எல்லாம் நம்மை ஆழ்ந்து படித்து ரசித்து சிந்தனையில் நினைக்க வைக்கும் ஒரு அற்புதமான செய்திகளாக இருக்கும். ராம நவமி என்ற உற்சவம் எங்கெங்கு எவ்வளவு அற்புதமாக கொண்டாடப்பட்டது என்று படங்களுடன் தகவல்களைப் படிக்கும் போது ஸ்ரீ ராம ராமேதி என்று என் உதடுகள் முணுமுணுத்தன. மதுரையில் சித்திரை திருவிழா எந்த காலத்தில் நடக்கப் போகிறது என்றும் அதற்கு எப்போது முகூர்த்தக்கால் நடுவார்கள் என்று மிக அருமையான தகவல் சொல்லி புல்லரிக்க வைத்து விட்டது. இந்தியாவுக்கு எதிராக இலங்கை பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நம் பிரதமர் மோடிஜியுடன் திசநாயக்க உறுதி. அவர்கள் எடுத்துக் கொண்ட படமும் செய்தியும் அயல் நாட்டு செய்தி அழகாக படம் பிடித்து காட்டியது. ஒவ்வொரு விடியலும் எப்போது வரும் தமிழ்நாடு இ பேப்பர். காம் என்ன செய்திகளை அழகாக தொகுத்து கொடுக்கப் போகிறது என்ற ஆவலுடன் நாளுக்கு நாள் எதிர்பார்க்க வைக்கும் ஆசிரியர் குழுமத்தின் இந்த பணிக்கு ஒரு ராயல் சல்யூட்  



-உஷா முத்துராமன்