tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-09.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-09.04.25


 அன்புடையீர் 


வணக்கம். 9.4.2025 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் மசோதாக்கள் நிறுத்தி வைத்தது சட்ட விரோதம் என்ற இன்றைய அரசியல் மிகத் தெளிவாக புரியும்படி சொன்னது பாராட்டுக்குரியது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான நாளாக எனக்கு கொடுத்தது திருக்குறள் மிகவும் அருமை அதைப் பொருளுடன் படித்து ஆனந்தம் அடைந்தேன். ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கல்யாண கருட சேவை என்ற செய்தி மனதுக்கு உற்சாகமாக இருந்தது. திருவண்ணாமலை கோவிலில் நாலு கோடி காணிக்கை குவிந்தது என்ற செய்தி பக்தர்களுக்கு இருக்கும் ஆன்மீக உணர்வை உணர்த்தியது. கோடைகாலத்தில் மட்டுமே மிகவும் அற்புதமாக கிடைக்கும் நுங்கு பற்றியும் அதை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் என்றும் நலம் தரும் மருத்துவம் பகுதியில் அழகாக தெளிவாக சொன்னது நுங்கு சாப்பிடும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. டொயோட்டாவில் விற்பனை புதிய உச்சம் என்று கார் எப்படி அதிகமாக விற்கப்படுகிறது என்ற செய்தி மகிழ்ச்சியுடன் படிக்க வைத்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு 30 நாளில் செயற்கை அவையங்கள் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தது நல்ல முயற்சி. தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் டிஎன் தீர்த்தகிரி முதலியார் அவர்களின் வரலாறு மிக அருமையாக இருந்தது. படிக்கும்போது வரலாற்றுச் செய்தி மனதில் நிறுத்தி படிக்க வைத்தது. பல் சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய சொன்ன டிப்ஸ் மிகவும் அருமை பயனுள்ள தகவல். மீம்ஸ் வழக்கம்போல் அருமையாக இருந்தது ஜோக்ஸ் மிகவும் ரசித்து சிரிக்க வைத்தது. தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க எடுத்த முயற்சி மிகவும் நல்ல அருமையான முயற்சி. இதனால் மின் இணைப்பு எப்போதும் இருந்து நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது. கிரைம் கார்னர் வழக்கம்போல் அதிர்ச்சியான தகவல்களை சொல்லி நம்மை எச்சரிக்கையாக இருக்க சொன்னது. மக்களுக்காக ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்ற ராகுல் காந்தி அவர்களின் பேச்சும் படமும் அரசியலை நன்றாக சுட்டிக் காட்டியது. அமெரிக்காவில் பேரிடர் மழையைப் பற்றியும் அதனால் 16 பேர் உயிரிழப்ப நூற்றுக்கணக்கான பாதிப்பு என்ற செய்தியை அமெரிக்காவில் இருப்பவர்களை பற்றி எண்ண வைத்தது. எல்லா பக்கங்களிலும் நல்ல செய்திகளாக அருமையாக தொகுத்துக் கொடுத்து நல்ல சேவை செய்யும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்தின் இது போன்ற சேவை என்றும் எங்களுக்கு தேவை என்ற வாழ்த்துக்களுடன் பாராட்டுகிறேன். 


நன்றி 

-உஷா முத்துராமன்