tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-16.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-16.04.25


 அன்புடையீர்,


 வணக்கம். 16/4/25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் முதல் பக்கத்தில் வந்த பஞ்சாங்கம் எனக்கு புதன்கிழமையை புன்னகையுடன் தொடங்க அருமையாக உதவியது. மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு ஏன் என்ற செய்தி அரசியலை அழகாக படம் பிடித்து காட்டியது. இன்றைய திருக்குறள் மிகவும் அருமையாக ஆர்வத்துடன் படிக்க வைத்தது பாராட்டு விழா நடந்த படங்களும் செய்தியும் படித்ததும் அவர்களை பாராட்ட தோன்றியது. நலன் தரும் மருத்துவம் பகுதியில் முருங்கைக்காயின் மருத்துவ குணங்களை பயன்களையும் மிக அழகாக சொன்னது இதுவரை படிக்கிறாத புதிய செய்தியாக இருந்தது இஸ்ரேல் நாட்டிலிருந்து 5000 தொழிலாளர்கள் தேவை என்று உ. பி. க்கும் பீகார் மாநில அரசுகளிடமும் கேட்டு கடிதம் வந்தது நம் நாட்டின் உழைப்பை மிக அருமையாக உணர்த்துகிறது. தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கே பி எஸ் மணி அவர்களின் வரலாறும் அவருடைய எழுச்சிமிக்க புகைப் படமும் படிக்கும்போது ஒரு உத்வேகம் வந்தது. பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த பணம் மட்டும் வாழ்க்கைக்கு போதுமா என்ற கேள்வியும் அதற்கான விளக்கமும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான தகவல். மீம்ஸ் மிக அற்புதமாக இன்றைய பொழுது எனக்கு நன்றாக போக்க உதவியது. பல கோவில்கள் நிறைந்த காஞ்சிபுரம். எந்தெந்த கோவில்களை எப்படி பார்க்க வேண்டும் என்று முக்கியமான ஐந்து கோவில்களை பற்றிய விளக்கமாக சொன்னது பயனுள்ள தகவல். மேற்கு வங்க போராட்டத்தில் வன்முறை என்ற செய்தி அதிர்ச்சியாக படிக்க வைத்தது . டிஷ்யூ பேப்பர் என்றால் அது நம் முகத்தை துடைக்கவும் கைகளை துடைக்கவும் பயன்படும் அந்த டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்து ஆச்சரியத்திலும் அது அதிர்ச்சியாகவும் செய்த அந்த சிங்கப்பூர் ஊழியரைப் பற்றிய செய்தியை படித்தது எனக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.இப்படி உலகம் முழுவதும் சுற்றி நல்ல தகவல்களை சேகரித்து எங்களின் விடியலை சுறுசுறுப்பான விடியலாக மாற்ற உதவும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு நன்றியும், பாராட்டுக்களும் 


நன்றி

-உஷா முத்துராமன்