அன்புடையீர்,
வணக்கம் 22.4.2025 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் 266 வது போப் பிரான்சிஸ் காலமானார் என்று செய்தி மனம் வருத்தத்தை கொடுத்ததுடன் அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்தது. இன்றைய பஞ்சாங்கம் இன்றைய நாளாக எனக்கு செவ்வாய்க்கிழமை செழுமையுடன் தொடங்க உதவியது.
திருக்குறள் மிகவும் அருமை பொருளுடன் படித்து புரிந்து கொண்டவுடன் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லையம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய அந்த படமும் சேதியும் புல்லரிப்பை ஏற்படுத்தியது. எர்த் டே என்று உலக பூமி தினம் சிறப்பு பார்வை மிக அருமையான தகவல் மனம் நிறைந்த பாராட்டுக்கள் .
நலம் தரும் மருத்துவம் பகுதி இல்லாமல் அந்த இடத்தில் தங்கத்தின் உச்சம் என பட்டியலிட்டது ஏமாற்றத்துடன் அதிர்ச்சியையும் கொடுத்தது. எட்டு மத்திய மந்திரிகள் பதவி பறிப்பு என்று நம் பிரதமர் மோடிஜி அவர்களின் தீவிர ஆலோசனை படித்து இன்றைய அரசியல் நிலைமை மிக அருமையாக புரிந்தது.
பூந்தமல்லி போரூர் ஒரு வழி பாதையில் ஏப்ரல் 30க்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் என்ற செய்தி அருமையான தகவல் ஊட்டியில் ஏப்ரல் 25, 26 துணை வேந்தர்கள் மாநாடு என்ற செய்தி அந்த நாளை அரசியலில் அழகாக படம் பிடித்து காட்டியது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பெ. வரதராஜுலு நாயுடு அவர்களின் வரலாறு நல்ல அருமையான தகவல் ஒவ்வொரு வரியும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எனக்கு அழகாக படம் பிடித்து காட்டியது.
புதுக்கவிதை பக்கங்கள் பகுதியில் வரும் கவிதை வரிகள் ஆர்வத்துடன் படிக்க வைக்கிறது புதுப்புது கவிஞர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு ஈ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பல் சுவை களஞ்சியம் பகுதியில் வந்த அனைத்து செய்திகளும் மிகவும் அருமை மீம்ஸ் மிகவும் ரசித்து என்னையே மறந்து சிரிக்க வைத்ததுர திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா என்று கேட்டு அதனுடைய விளக்கத்தை கொடுத்தவுடன் நான் அந்த புத்தகத்தை படித்த நாட்கள் நினைவிற்கு வந்தன.
சமையலறை ஸ்பெஷல் மிகவும் அருமை அதில் வந்த சமையல் டிப்ஸ் மிகவும் பயனுள்ள தகவல் மனம் நிறைந்த பாராட்டுக்கள் தேங்காய் தக்காளி சேர்க்காத மதுரை நீர சட்னி செஞ்சு பாருங்க என்று ஒரு அருமையான எளிதாக தயாரிக்க கூடிய ரெசிப்பியையும் கொடுத்த தமிழ்நாடு இ. பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவில் சித்திரைத் தேர் திருநாள் என்ற வைபவம் நாலாம் நாள் திருநாள் என்று படத்துடனும் மற்ற அனைத்து கோவில் செய்திகளும் மிக அருமையாக இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்
குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் மூன்று பேர் உயிரிழப்பு என்ற செய்திக்கு அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்த அந்த செய்தி அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயங்கியது என்ற செய்தி சென்னையில் நடக்கும் அனைத்து தகவல்களையும் மிக அழகாக படம் பிடித்து காட்டியது.
திடீரென சாய்ந்தது கோவில் தேர் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது பக்தர்கள் எல்லோரும் அதிர்ச்சியானது போல் நானும் அந்த செய்தியை படித்து மிகவும் அதிர்ச்சியாக உணர்ந்தேன். ட்ரம்ப் பதிலடி நடவடிகளாலௌ விமான டிக்கெட் விலை குறைந்தது என்று மிக அருமையான நல்ல தகவலை சொன்னது பாராட்டுக்குரியது.
காரப்பட்டி என்ற இடத்தில் நடந்த தொழிலாளர்களின் நகங்களை பிடுங்கி நிர்வாணப்படுத்தி மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை என்று அதிர்ச்சி வீடியோவை படிக்க படிக்க உறைந்து போனேன். பெங்களூரில் ஆன்லைன் மோசடி என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது.
அயல்நாட்டு செய்தியான வெள்ளை மாளிகையின் திரண்ட மக்கள் டிரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம் என்ற செய்தி அமெரிக்காவுக்கே என்னை கற்பனையில் அழைத்துச் சென்றுவிட்டது. 10 ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்திய சீனா என்றவுடன் நாளுக்கு நாள் இணையதளங்கள் எப்படி முன்னேறுகின்றன என்று புரிந்தது.
புதுமை அருமை பெருமை வளமை என்று நல்ல மைகளை கொண்டு எழுதப்பட்ட தமிழ்நாடு இ பேப்பர் இன் அனைத்து செய்திகளையும் படிக்கும்போது நான் செழுமையாக உணர்ந்தேன். தங்களின் இந்த பணி என்றென்றும் இதே போல் சிறக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
நன்றி
உஷா முத்துராமன்