tamilnadu epaper

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்)-14.05.25

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்)-14.05.25


இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் குழந்தைகளின் கை வண்ணம் பகுதியில் சின்ன குழந்தைகளின் அழகான ஓவியங்களை கண்டபோது குழந்தைகள் அனைவருமே ஓவியப்பிரம்மாக்களாக தெரிந்தனர். இந்த வாரம் அன்னையர் தினம் சிறப்பை ஒட்டி விலைமதிப்பில்லாதது எது என்கிற தலைப்பில் ஆன கட்டுரை தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும் ,உலகிலேயே உயர்ந்தவர்கள் அவர்கள் தான் என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு அறிவுறுத்து வகையில் இருந்தது. எம் அசோக் ராஜாவின் ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு குறித்த கட்டுரை ஆன்மீக அன்பர்களுக்கு நல்ல தகவலாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இன்றைய நாளிதழ் நலம் தரும் மருத்துவ பகுதியில் குண்டாய் இருந்தால் என்னென்ன ஏற்பாடுகள் எல்லாம் உண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கை கட்டுரை உண்டாக இருக்க குழந்தைகள் உடலில் என்னென்ன நோய்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு உண்டு அவற்றையெல்லாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதைப் பற்றிய தகவல் அருமை.



-கவி-வெண்ணிலவன்

மணமேல்குடி