இலக்கியச் செல்வர் பழுத்த அரசியல் வாதி அகவை மூப்பில் இயற்கை எய்திய குமரி அனந்தன் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
பணவிடை படிவங்களை தமிழில் அச்சிட அஞ்சல் துறை யில் போராடி அச்சிட வைத்தவர்.
பாராளுமன்றத்தில் தமிழில் உரையாட உறுப்பினர்களுக்கு அனுமதி பெற்றுத் தந்தவர்
காற்று சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3 ம் இடத்திற்கு முன்னேறியிருப்பது பெருமைக்குரியது.
பங்குச் சந்தை மோசடியில் காவல்துறை காவலரும் மனைவியும் ஈடுபட்டுரூ 25 கோடி சுருட்டியிருக்கிறார்கள்.
வேலியே பயிரை மேய்ந்தால்!
பெண்போல சேலையணிந்து 100 நாள் வேலை திட்டத்தில்
ரூ 3 லட்சம் மோசடி.
ஆள்மாறாட்டத்தில் 5 கோடி மதிப்புடைய வீட்டை அபகரித்தவர் அகப்பட்டார்.
வரவர யாருக்கும் பயமேயில்லை.
நட்சு சாப்பிடுவது நலமே.
மும்பை தாக்குதல் தீவிரவாதியை ஒருவழியாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விட்டார்கள்.இனி தாக்குதல் செய்ததற்கு நீதி ்கிடைக்கட்டும்.
சிறுமையைப் பாலியல் வண்புணர்வு செய்த மதரசா ஆசிரியர்க்கு187 ஆண்டுகள் தண்டனையாம் .
நான் பார்த்த… சிறுகதையில் ஒருத்தி ஒருவனை ஒன்றிரண்டு முறை பார்த்து சிரித்தாளாம். எவ்வித அறிமுகம் பேச்சு எதுவுமே இல்லை.சிரிச்சுட்டுப் போன பெண்ணையே பெண் பார்க்கப் போனா னாம். அவளையே திருமணம் செய்ய சம்மதிச்சுட்டனாம்.
என்னங்க இந்தக் காலத்துல இதெல்லாம் நடக்கிற காரியமா?
எகிப்து பயணக் கட்டுரை நல்ல அனுபவம்.
பட்டு ராசு வரலாறு அறிய வேண்டியது தான்.
-சிவ சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி