tamilnadu epaper

வாசகர் கடிதம் (தாணப்பன் கதிர்)-16.04.25

வாசகர் கடிதம் (தாணப்பன் கதிர்)-16.04.25

வணக்கம்


     16.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.



  மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக்குழு ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் தலைமையில் அமைத்திருப்பது தேவையான ஒன்று.


    பென்சில் பிரச்சினையால் சக மாணவருக்கு அரிவாள் வெட்டு எனும் செய்தி அதிர்ச்சியடைய வைத்தது. சாதி சமயமற்ற மாணாக்கப் பருவம் நட்பைத் தொலைத்து வன்மத்துகாகும் வன்முறைக்கும் அடிமையாகி இருப்பது வேதனை. திரைத்துறையில் இதுபோன்ற காட்சிகள் கையில் இருக்கும் கைபேசியில் ஆபாசம் கலந்த வன்முறை ரீல்ஸ் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பைத் தருகிறது. மாணாக்கப் பருவத்திலேயே சாதி எனும் வன்மம் விதைக்கப்படுகிறது. மதிப்பெண்களை நோக்கி மாணாக்கரை விரட்டி விரட்டி இயல்பாக சிந்தனை செய்யும் திறனை மழுங்கடித்து விடுகிறது இன்றைய கல்வி. நல்லொழுக்க வகுப்பு தற்போதெல்லாம் இல்லை. பள்ளி மாணாக்கருக்கு வாரத்திற்கு ஒரு நல்லொழுக்க வகுப்பு, வாரத்திற்கு ஒருநாள் மனநலம் குறித்த விழிப்புணர்வு வகுப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்.


  வரிகளைத் தவிர்க்க வசதி படைத்த இந்தியர்கள் வருமானத்தை குறைத்துக் காட்டுவதை கண்டறிந்து ஆய்வை கருத்துடன் நோக்கி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட முயல வேண்டும்.


  இஸ்ரோவில் ஐம்பதாயிரம் தொழிலாளர்கள்தேவை. உ.பி, பீகார் மாநில அரசுகளிடம் கேட்கப்பட்டதற்கு விரைந்து ஆள்கள் தந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.


  தொலைந்தெல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்ளும். மனநிலையைத் தந்தது கட்டுரை.


  கே.பி.எஸ். மணி பற்றிய வரலாற்றுக் கட்டுரை இன்றைய தலைமுறையினருக்கு உத்வேகம் தரும்.


  குழந்தைகளின் கைவண்ணம். பகுதி சிறார்களின் ஓவியங்கள். அற்புதம். அனைவருக்கும் வாழ்த்துகள்.


  காஞ்சியில் பார்க்க வேண்டிய இடங்கள் செய்தி சுற்றுலா வழிகாட்டி.


  2025ல் கூடுதலான மழைப்பொழிவு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதைக் கவனத்தில் கொண்டு சேமித்து வைக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தற்போதே முன்னெச்சரிக்கையாகத் துவங்க வேண்டும்.



-தாணப்பன் கதிர்

( ப. தாணப்பன் )