இன்று (11.04.2025) தமிழ்நாடு இ பேப்பர் நாளிதழில் முதல் பக்கத்தில் தீவிரவாதி ராணா நாடு கடத்தப்பட்ட செய்தி இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதை உறுதி செய்துள்ளது.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் அன்னாசி பழம் ரத்த சோகையை நீக்கும் என்பதை அறிந்து கொண்டேன்.
நேரத்தைத் கடைப்பிடி சிறுகதை நேரம் தவறாமல் எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவது சிறப்பு.
புதுக்கவிதை பகுதியில் திரு குமரி அனந்தன் அவர்கள் பற்றி கவிதை மிகவும் அருமை.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் முடி உதிர்தல் தடுக்க இயற்கை வைத்தியம் குறிப்புகள் அனைவருக்கும் பயனளிக்கும்.
திருக்குற்றலாம் தல வரலாறு பற்றி பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
முதலமைச்சரின் இளைஞர் விருது மற்றும் ஜிப்லி செயலி பற்றி எச்சரிக்கை செய்தி வரவேற்க தக்கது.
-தேனே T.P.குமரன்,
மகர்நோம்புச்சாவடி,
தஞ்சாவூர்