*13.05.2025*
தமிழ் நாடு இ பேப்பரின் வாசிப்பு அனுபவம் அற்புதம்... அற்புதம்.வற்றாத தெளிந்த நீரோடையாய்...
வளமார்ந்த பக்கங்களின் பக்கா அணிவகுப்பு இந்த கத்திரி வெயிலுக்கு இதமான இன்பம் மட்டுமல்ல... ஆத்மாவுக்கு ஆரோக்கிய பலம்...
பக்குவம்... பரவசம் எல்லாம்! அன்பார்ந்த ஆசிரிய குழுவினர்க்கு
என்றென்றும் இனிய வாழ்த்து...வாழ்த்து!
ஒரு கோடி வாசக சொந்தங்களை ஒன்றிணைக்கும் இலட்சிய பயணம் விரைவில் வெல்லட்டும். இந்த வியனுலகம் ஜொலிக்கும். வித்தகங்கள் விரிந்து கொண்டே மலர்ந்து --
மலர்ந்து கொண்டே விரிந்து செழிக்கட்டும்!
அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமரின் முதல் உரை
முத்தாய்ப்பு உரை..
முதன்மை அந்தஸ்தில் வெளிச்சப் படுத்திய
தமிழ்நாடு இ பேப்பரின் விரிந்த சிந்தைக்கு வித்தக வாழ்த்துகள்!
பிரதமரின் இந்த முக்கிய உரை இந்தியாவுக்கு மட்டுமல்ல...
அனைத்து நாடுகளுக்கும் ஆனந்த ஆறுதல். போரில்லா உலகம் உருவாக அவர் போட்ட பிள்ளையார் சுழி பிரம்ம பலம் மிக்கது.நிச்சயம் நிறைவேறும்.
உலக அமைதி இங்கே நிரந்தரமாக நங்கூரம் பாய்ச்சி நிலைத்திடும்
வியத்தகு சூழ்நிலை விரைவில் இங்கே மலரும். ராணுவ பட்ஜெட் இல்லாத உலகில், அச்சம் இராது. வறுமை இராது.அறியாமை
இராது.பிணி இராது.
பிச்சை இருக்காது.
நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறதே!
ஆகவே எல்லோரும்
போரில்லா உலகம் பூத்திட, நித்தம் ஒரே ஒரு நிமிடம் உள்ளன்போடு பிரார்த்தனை புரிவோம். இந்த பூமியைக் காப்போம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரை வேக்காடு அறிக்கையை சாதுர்யமாக நிராகரித்த இந்தியா!
ராஜதந்திர நிபுணத்துவத்தை பாரில் உள்ள நாடுகள் அனைத்தும் பாரதத்திடம் படிக்க வேண்டும்.
பச்சை பட்டுடித்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பற்றிய விரிவான விளக்கம்
ஆன்மீக தேடலில் இருக்கும் வாசக நெஞ்சங்களுக்கு
ஆயிரம் வாட்ஸ் அக்மார்க் வெளிச்சம்.
சின்னச் சின்ன செய்தி களை புறந்தள்ளாமல்
சீராக அடுக்கி அணி வகுப்பாய் அலங்கரித்து வெளியிட்டு வெளிச்சம் தந்த தமிழ் நாடு இ பேப்பருக்கு வந்தனம்... வந்தனம்...
வாழ்த்து!
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாவதைப் பற்றி வெளியிட்ட செய்தி எல்லோரின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருந்தது நிஜம்.
பொல்லாங்கு பண்ணும் மனிதரை மோதி மிதித்து ஒழித்து விட வேண்டும் தானே!
நலம் தரும் மருத்துவம் பகுதியில் நல்லதொரு கட்டுரை.
ரேபிஸ் அச்சம் தவிர்..
தடுப்பூசி தவறேல்
கவித்துவ நயமிக்க தலைப்புகள் ஆல் நம் மனதைக் கொள்ளை கொள்கிறது தமிழ்நாடு இ பேப்பர்.
பயனுள்ள தகவல்கள்
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த வேண்டியது அவசியம்... அவசியம்.
அரசின் கவனத்திற்கு கட்டாயம் கொண்டு சேர்க்க வேண்டும்.
வழக்கம் போல் அரசியல் செய்திகள் அசத்தல் ரகம்.
பள்ளிக்கூடம் போகலாமா?
தாய் கிழவி தாய் கிழவி...நெஞ்சை அள்ளும் பண்பட்ட படைப்புகள். பாராட்டா விட்டால் நம் மீது பழி வந்து சேரும் பாஸ்!
செக்கிழுத்த செம்மல்
வ.உ.சி. வரலாறு...
கேட்கவும் வேண்டுமோ!
சேரில் இருந்து சிலிர்த்து நிமிர்ந்து வாசித்து செழித்தேன்.
கவிதைப் பக்கங்கள் தேன்சுவை தாண்டிய வர்க்கப் பலா!
வளமான கற்பனைகளோடு
வளமான சிந்தனைகள் சேர்ந்து மிளிர்ந்து ஜொலி ஜொலிக்கும் மகத்துவத்தை எடுத்துச் சொல்ல வார்த்தை இல்லை.
தன்னிகரில்லா
தமிழ்நாடு இ பேப்பரே!
தரணி உள்ளவரை
உன் தீந்தமிழ்த் தொண்டும் மாசிலா தேசத் தொண்டும்
தொடரட்டும்...
தொடரட்டும்!
-நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்