வணக்கம்
09.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டிய பத்து மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஆளுநரின் செய்கைக்கு குட்டி இருக்கிறது.
தமிழக முதல்வர் கூற்றுப்படி தமிழகத்திற்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி என்பது மிகச்சரி. காலம் தாழ்த்தாது மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவது பற்றி ஒவ்வொரு ஆளுநரும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் மேம்பாட்டுத் திட்டம் வெகுவிரைவில் அமலுக்கு வர வேண்டும்
ஶ்ரீரங்கனுக்கு பழைய சோறும் மாவடுவும் ஆன்மீகக் கட்டுரை ரெங்கநாதர் எவ்வாறு ஆட்கொண்டு அருள்பாலித்தார் என்பதைக் கண் முன்னே காட்டி நின்றது. அவனே கதி என்றிருந்தால் ஆட்கொள்ள நேரில் வருவான் ஆண்டவன். பங்குனி வெயிலுக்கு பழைய சோறு உகந்தது என்று ரெங்கநாதர் தேடி வந்திருப்பாரோ!
எழுத்தாளர் பகீரதன் பற்றிய கட்டுரையினை வரைந்து விட்டு அவரது படத்தையும் போட்டு விட்டு டி. என். தீர்த்தகிரி முதலியார் என்று தலைப்பு கொடுத்திற்பதற்கு கண்டனங்கள்.
பல்சுவைக் களஞ்சியம் பகுதி சிறப்பு.
குழந்தைகள் கைவண்ணம் பகுதியில் இடம் பெற்ற குழந்தைகளின் ஓவியங்கள் அழகு . கட்டுரைகளும் சுவராஸ்யம்.
தமிழகத்தில் மின்வெட்டைத் தவிர்க்க 3910 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய இருப்பது அவசியமானது. முன்னமே திட்டம் வகுத்து உடனே செய்ய வேண்டிய ஒன்று.
என்டிஏவுக்கு எதிரான நீட் குளறுபடி வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. வரும் ஆண்டிலிருந்தாவது இதுபோன்ற குளறுபடிகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்காக நீதிமன்றத்திடம் கோரிய தீர்வுகளை என்டிஏ உடனே அமல்படுத்த வேண்டும்.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )