வணக்கம்
22.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்ஸிஸ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஒரு எளிய நபராக இருந்து இரக்கமுள்ள கத்தோலிக்க திருச்சபைமை உருவாக்கிய சீர்திருத்த தலைவராக வரலாற்றில் இடம் பிடித்த போப் பிரான்ஸிஸ் புகழ் வாழ்க.
ஒவ்வொரு ஆண்டும் மழையின்மை, பூமி அதிக மாசுபடுதல், பூமி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இன்று கொண்டாடப்படும் பூமி தினத்தில் வெப்பமயமாதலைத் தவிர்க்க மரங்களை நட்டு பெருக்க உறுதி கொள்வோம்.
தமிழகத்தில் சாதீயப் பாகுபாடு அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டி இருக்கும் தமிழிசையின் கருத்தை கவனத்தில் கொண்டு களைய முற்பட வேண்டும்.
அட்சய திருதியை விளக்கம் சிறப்பு.
பெ. வரதராஜுலுநாயுடு பற்றிய செய்திகளைத் தந்த தெளிவான கட்டுரை.
பக்தி எப்படி இருக்க வேண்டும் எனும் கட்டுரை மாணிக்கவாசகப் பெருமானின் வரிகளால் நம்மை இறைவன் பால் ஈர்க்க வைத்தது. வேண்டத்தக்கது அறியோய் நீ, உற்றாரை யான் வேண்டேன் பாடல்கள் வாயிலாக உன் திருவடி இருக்க எனக்கென்ன வேண்டும் என்று அவன் திருவடி தரிசனம் நோக்கி நம்மை அழைத்து சென்றது.
அர்த்தமுள்ள இந்துமதத்தின் ஆறாம் பாகமான நெஞ்சுக்கு நிம்மதி வாழ்வில் அனுசரித்து ஒருவருக்கோருவர் நன்கு புரிந்து விட்டுக்கொடுத்து போனால் இன்பம் ததும்பும் என்று கண்ணதாசன் தரும் கோட்பாட்டை ஏற்று ஆனந்தம் கொள்வோம்.
தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )