*காதல் வானிலே.... ஓர் அழகிய தலைப்பைத் தேர்ந்தெடுத்த இனிய கவிஞர் மணல்மேல்குடி ஆசிரியர் திலகம் கவி வெண்ணிலவன் ஐயா அவர்களுக்கு என் முதல் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்*
*ஐயா அவர்களுக்குத் தொடர் கதை எழுத வாய்ப்பளித்து எங்களை மகிழ்வித்த தமிழ்நாடு இ செய்தித்தாளுக்கும் ஆசிரியர் குழுமத்திற்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்*
*கதையைத் தொடங்கும் முன் கேரக்டர்களை வர்ணித்த விதம் ஒரு தனி அழகு அந்த அழகு மனதை வரி வரியாய் வேகமாக இழுத்துச் சென்றது*
*அம்மா.... அப்பா.... மகள் உரையாடலில் அழகாய் பாசம் மட்டுமல்ல குறும்பும் கொப்பளித்தது தெரிந்தது*
*தொடக்கக் காட்சியிலேயே தமிழ்நாடு இ பேப்பர் படிப்பது போன்ற காட்சியைக் கொண்டு வந்தது எக்சலண்ட்!*
*தொடர் கதைக்கான தவறாத இலக்கணமாய் முதல் வார முடிவிலேயே சஸ்பென்ஸாக முடித்தது ஸ்பெஷல் த்ரில்!*
*இரண்டாவது முதலிலேயே நல்ல விறுவிறுப்புடன் தொடங்கியிருந்தது செம சூப்பர்!*
*ருத்ர மூர்த்தி நாகராஜ் மாதவன் உரையாடல் கதையின் அடுத்த கட்டத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் இழுத்துச் சென்றது வித்தியாசமான அமர்க்களம் இந்த வாரமும் தொடரும் எண்ட் பாகம் த்ரில்லோ த்ரில்!*
*எச்சரிக்கையாக இருந்தாலும் மனதிற்குள் தான் டிஸ்மிஸ் செய்தவர்களால் ஏற்படும் பாதிப்பைச் சுட்டிக் காட்டியிருந்தது நல்ல நுணுக்கமான திறன்!*
*தொடர்ந்து மூன்றாவது வாரமும் நல்ல விறுவிறுப்பு! தொடர் கதை அருமையான வேகம்!*
*சந்தோஷின் கல்யாண ஆசை நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதைப் படிக்க மிகவும் ஆவலாகவே உள்ளது!*
*கதையின் கேரக்டர்கள் காட்சிகள் வர்ணனைகள் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகும் த்ரில் என காதல் வானிலே.... கோடையிலும் குளிர்ச்சியாய் மனதை மிதக்க வைக்கிறது!*
*கதைச் சக்ரவர்த்தி கவி வெண்ணிலவன் அவர்களின் அடுத்தடுத்த அழகழகான வரிகளுக்காக இதயம் நிறைந்த பாராட்டுகள.
-
ப்ரியங்களுடன்
முத்து ஆனந்த்