அனைவருக்கும் காலை வணக்கம் !
ட்ரம்ப்பின் வரிவிதிப்பால் உலகத்தில் உள்ள அனைத்து பங்கு சந்தைகளுமே பாதிப்படைந்திருக்கின்றது.
இந்திய பங்கு சந்தை ஒரே நாளில் 16 லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் 7000 கிராமங்கள் கணவனை இழந்த மனைவிகளுக்கு
எதிரான வழக்கங்களை
கைவிட்டு இருக்கின்றன.
உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வெற்றி கண்ட ராஜாராம் மோகன் ராயின் ஆத்மா இப்பொழுதுதான் சாந்தி அடையும்.
உத்தரகோசமங்கை கோயில் கும்பாபிஷேக விழா பற்றிய செய்தி பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக மத்திய அரசு 217 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
மத்திய பிரதேசத்தில் முதியோர் இல்லத்திற்கு செல்ல மறுத்த மாமியாரையும்
தனது கணவனையும்
கடுமையாக தாக்கி இருக்கிறார் ஒரு பெண்மணி. இந்த செய்தி பதை பதைக்க வைக்கிறது.
ட்ரம்ப்பின் இருபத்தைந்து சதவீத வரி விதிப்பால் பாதிப்படைந்த பிரிட்டனின்
ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆடம்பர
கார் தயாரிப்பாளர்கள்
அமெரிக்காவுக்கு தங்கள் கார்களை விற்பனைக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி இருக்கிறார்கள்.
தங்கள் நாட்டு அதிபரின் செயலால் அமெரிக்க மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பது தடை படுகிறது.
தனது பாதுகாப்புக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும் என்ற நம்பிக்கையில் போரில் இறங்கிய உக்ரைன் அதிபர்
ஜெலன்ஸ்கி அமெரிக்காவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் உதவி தடைப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறார்.
எந்த நாடும் தனது பாதுகாப்புக்காக இன்னொரு நாட்டை முழுவதுமாக நம்பி இருக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்