வாசகர் விமர்சனம்
14/5/2025 இதழில்
வெளியான லால்குடி வி நாராயணன் அவர்களின் "ஒன்னுமே வரல" சிறுகதையில், குழந்தை ராகுல் அமெரிக்காவில் இருக்கும் அக்காவிடமிருந்து கிப்ட் பார்சலை எதிர்பார்த்து காத்திருக்க, தினமும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து "ஒன்றுமே வரல" என நொந்து போயிருக்கும் நிலையில், மே 1ஆம் தேதி அவனது தாயார் தூங்கிக் கொண்டிருக்கும் ராகுலை எழுப்பி "டேய் நீ ஒண்ணுமே வரலன்னு சொன்னியேடா இன்னைக்கு தான்டா ஒண்ணுமே" என அவனை கலாய்க்கிறார். ஆனாலும், பாவம் குழந்தை எதிர்பார்த்த கிப்ட் பார்சல் வராதது அவனுக்கு ஏமாற்ற"மே"
அருமையான நகைச்சுவை கதை.