அவர் மிகு நிதி சேர்த்தார்;
இவர் மக்களை ஏமாற்றிப் பிழைத்தார்;
என்றே சொல்லியே
பாரெங்கும் திரிந்தார்.
சதி செய்யும் சமர்த்தர் அவர்.
மெத்தப் படித்த மதியாளர் அவர்.
தன்வினை தன்னைச் சுடும்; வேறென்ன?
மிதிக்கும் விதிக்கு
தப்பாமல் தலைவணங்கி,
தன் வீட்டில் தனியாய் நின்றார்.
குங்கலியம் சுமந்த கழுதையென.

-சசிகலா விஸ்வநாதன்