இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவம் பகுதியில் பெண்கள் கீழ் அணிவதால் ஏற்படும் சிரமங்கள் குறித்து மிக தெள்ளத் தெளிவான தகவலாக இருந்தது. தினம் ஒரு தலைவர் பகுதியில் மருதநாயகம் வரலாறு கட்டுரை படித்தேன் இதுவரை நான் அறியாத ஒரு தகவலாக இருந்தது முஸ்லிம் மதத்திற்கு மாறி பெயரையும் முஸ்லிம் பெயராக மாற்றிக் கொண்டான் என்கிற தகவல் புதிதாக இருந்தது. ஓம் எனும் மந்திரத்தின் சிறப்பு பற்றிய கட்டுரை ஓங்காரத்தின் விளக்கமாக தெள்ளத் தெளிவான தகவலை தந்த கட்டுரையாக அமைந்திருந்தது. பல்சுவை களஞ்சியத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் துரியோதனனுக்கு கூறிய அறிவுரை எல்லோருக்கும் தர்மத்தை உணர்த்தும் விதமாக இருந்தது. குழந்தைகளின் கைவண்ணம் பகுதியில் பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப்படுவாய் என்கிற கருத்தை நரியின் மூலம் சிறுகதை வடிவில் தந்து நல்லதொரு கருத்தை சிறுவர்கள் மனதில் பதியும் வண்ணம் செய்தது சிறப்பு.
-கவி-வெண்ணிலவன்
மணமேல்குடி