பெண் குழந்தை பிறந்திருக்கு " என்ற
மருத்துவரின் குரல் காதுகளில் விழுந்த நேரம்
தேவர்களால் ஆசிர்வதிக்கப் பட்ட நேரம் .!
அரைமயக்க நிலையிலும்
வானில் பறப்பது போன்ற பரவசம்..!
என் தேவதையை அணைத்துக்
கொஞ்சிட ..உடம்பின் அத்தனை செல்களும்
துடிக்க ..ரோஜாப் பூக் குவியலாக
துயிலும் என் செல்லத்தை நான்
தொட்டதும் ..! என்ன சொல்ல...?எப்படி சொல்ல?
மீண்டும் ஒரு முறை புதிதாய்ப் பிறந்த சந்தோஷம்..!
வீட்டிலுள்ளோர் முகங்களிலும்
தெய்வத்தையே நேரில் பார்த்தது போன்ற உணர்வு..!
அனைவருடைய கால அட்டவணையும்
குட்டித் தேவதையின் தூக்க நேரத்தை
அனுசரித்து மாற்றியமைக்கப்பட ...
சொர்க்கம் என்பதே என் குழந்தையின்
மெய் தீண்டலில்தான் என்ற கர்வம்
ஒவ்வொரு நொடியும் மேலோங்கியது..!
நான்கு வருடங்கள் மாயமாய் ஓடிட ..
மீண்டும் அதே அனுபவம்...
இரண்டாவது குழந்தையும் பெண்ணாக
இருக்க வேண்டுமென்ற என் விருப்பம்
இறைவனால் நிறைவேறியது ..!
என் இரண்டு தேவதைகளும் .அவர்களது
அன்பால் ,பாசத்தால் ..மகிழ்விப்பதால்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..
எங்கள் வானில் தினந்தோறும் பௌர்ணமி ..!
விஜி சம்பத், சேலம்.