"தான…தர்மத்துக்கும்மா”
" />
கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த பொன்னுரங்கம் தன் கைப்பையில் பணக்கட்டுகளைத் திணிப்பதைப் பார்த்த அவரது பேத்தி கலைவாணி கேட்டாள். "எதுக்கு தாத்தா இவ்வளவு பணம்?”
"தான…தர்மத்துக்கும்மா”
"அப்ப நானும் உங்க கூட வர்றேன் தாத்தா” பேத்தியுடன் கோவிலுக்கு வந்து கடவுளை வழிபட்ட பொன்னுரங்கம் அந்தப் பணக்கட்டுகளை கோவில் உண்டியலில் போட்டு விட்டு வெளியேறினார்.
காரில் ஏறும் போது பேத்தி கேட்டாள் "ஏன் தாத்தா… இங்க உட்கார்ந்திட்டிருக்கற பிச்சைக்காரங்கெல்லாம் சாப்பாட்டுக்கே இல்லாம தட்டை நீட்டுறாங்க…அவங்களுக்குப் போடாம… நிறைய தங்க நகை அலங்காரத்தோட இருக்கற சாமிக்குப் போய் அத்தனை பணத்தைப் போடறீங்களே… ஏன்?”
பதில் சொல்ல இயலாது திணறிய பொன்னுரங்கம் தன் பையில் மீதமிருந்த பணத்தையெல்லாம் அந்தப் பிச்சைக்காரர்கள் தட்டில் போட்டு விட்டு காருக்குத் திரும்பினார்.
ஏதோ ஒரு தெளிவு ஏற்பட்டாற் போலிருந்தது.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்