tamilnadu epaper

?*நாணேறும் *வானவில்*?

?*நாணேறும் *வானவில்*?

சல்லி வேரின் உறுதியில்,

கல்லும் நெக்கு விட,

உயர்ந்து ஓங்கும்

தரு உரைக்கும்,

ஒரு மந்திரம்,

உறுதியான உழைப்பே,

உயர்வுக்கு உயிர் நாடி.

உயர்வில் நாட்டமுற்று,

அயர்வில்லாமல் முயல்வோன்

அடைவான்;

விண்ணகத்தின் உச்சி;

மண்ணகத்தின் ஆழம்;

வானவில்லையும் 

நாணேற்றும் வலிமை.

 

சசிகலா விஸ்வநாதன்